இந்தியா

ஆந்திரம்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

27th May 2021 03:06 PM

ADVERTISEMENT


கரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனிடயே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குணமடைந்தவர்களுக்கு கருப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. 

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தேர்வு தொடர்பாக ஜூலை மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavirus covid 19 board exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT