இந்தியா

நாடு முழுவதும் 33.69 கோடி கரோனா பரிசோதனைகள்

27th May 2021 10:29 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 33.69 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 21 லட்சத்து 57 ஆயிரத்து 857 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 33.69 லட்சமாக (33,69,69,352) அதிகரித்துள்ளது.

Tags : corona covid 19 coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT