இந்தியா

கரோனா: மகாராஷ்டிரத்தில் பெற்றோரில் ஒருவரை இழந்த 1,964 குழந்தைகள் 

27th May 2021 12:14 PM

ADVERTISEMENT


கரோனா இரண்டாம் அலை காரணமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 82 குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்றோரான நிலையில், 1,964 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக கரோனாவுக்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள் தத்தெடுத்துக் கொள்ள தயாராக இருப்பவர்கள் அணுகுமாறு வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் வேகமாகப் பரவின. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது என்றும், அதுபோன்ற தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலையால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், காரணமாக 82 குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்றோரான நிலையில், 1,964 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

Tags : Maharashtra children
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT