இந்தியா

திருமலை நடைபாதை இரு மாதத்திற்கு மூடல்

26th May 2021 06:17 PM

ADVERTISEMENT

திருப்பதி அலிபிரியில் உள்ள திருமலைக்கு செல்லும் நடைபாதை மார்கத்தை தேவஸ்தானம் இரு மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.

திருப்பதி அலிபிரி நடைபாதை மார்கம் வழியாக பக்தர்கள் திருமலைக்கு சென்று வருகின்றனர். இந்த மார்கத்தில் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாக்க மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கூரை அமைத்து பல ஆண்டுகள் ஆனதால், பல இடங்களில் அது சேதமடைந்துள்ளது.

எனவே, அதை செப்பணிட்டு, சீரமைக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. அதற்கான பணிகள் அலிபிரி நடைபாதை மார்கத்தில் ஓராண்டாக நடந்து வருகிறது. செப்பணிடும் பணிகள் நடந்து வரும் நிலையிலும் பக்தர்கள் அம்மார்கம் வழியாக செல்ல அனுமதி வழங்கியது. தற்போது கோவிட் காரணமாக நடைபாதையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இப்பணிகளை விரைவாக முடிக்க தேவஸ்தானம் முயன்று வருகிறது.

எனவே, ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை அலிபிரி நடைபாதை மார்கத்தை மூட உள்ளது. இந்த இரு மாதத்திற்குள் இப்பணிகளை நிறைவு செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஆனால் நடைபாதை மார்கத்தில் செல்ல விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரிமெட்டு மார்கம் வழியாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : Tirupathi
ADVERTISEMENT
ADVERTISEMENT