இந்தியா

கரோனா தடுப்பூசியை நிர்வகிக்க தனியார் மருத்துவமனைகள் தெலங்கானா அரசு அனுமதி

26th May 2021 11:40 AM

ADVERTISEMENT

 

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கத் தனியார் கரோனா தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தெலங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

செவ்வாயன்று வெளியிட்ட உத்தரவின்படி, பதிவு செய்யப்பட்டுள்ள கரோனா மையங்களில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தடுப்பூசிகளை மேற்கொள்ள பணியிடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், பணியிடங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்த தெலங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது. 

ADVERTISEMENT

தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3,821 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,298 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். அதேசமயம் 23 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : vaccination
ADVERTISEMENT
ADVERTISEMENT