இந்தியா

சுமார் 15 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு: மம்தா பானர்ஜி

26th May 2021 03:37 PM

ADVERTISEMENT


யாஸ் புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட காற்று மற்றும் கன மழை காரணமாக, சுமார் 15 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த யாஸ் புயல் மேலும் வலுவடைந்து திங்கள்கிழமை நள்ளிரவு தீவிரப் புயலாக மாறியது. இந்த தீவிரப் புயல் மேலும் வலுவடைந்து, அதிதீவிரப் புயலமாக மாறி, ஒடிஸா-மேற்கு வங்கம் கடலோரப் பகுதியில் பாரதீப்-சாகா்தீவுகள் இடையே தாம்ரா துறைமுகம் அருகே இன்று நண்பகலில் கரையைக் கடந்தது.

இந்த நிலையில், பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது, புயல் பாதித்த பகுதிகளிலிருந்து சுமார் 15 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளை வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட உள்ளேன்.

யாஸ் புயல் காரணமாக எழுந்த பெரும் அலைகள் மற்றும் மிக மோசமான வானிலை காரணமாக மேற்கு வங்கத்தில் சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT