இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 18,285 பேருக்கு கரோனா

26th May 2021 06:22 PM

ADVERTISEMENT


ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 18,285 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,105 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 99 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,27,390 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,24,859 பேர் குணமடைந்துள்ளனர். 10,427 பேர் பலியாகியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 1,92,104 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

நேற்று 15 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியான நிலையில், இன்று 18 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT