இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22.17 லட்சம் கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர் 

26th May 2021 10:07 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,17,320 கரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 33,48,11,496 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

"இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 22 லட்சத்து 17 ஆயிரத்து 320-க்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. பரவலான பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகயளவிலான பரிசோதனைகள் மூலம் தொற்று பாதித்தவர்களை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்தவும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் உதவுவதுடன், இறப்பு விகிதத்தை குறைக்கவும் உதவுகிறது" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,71,57,795 ஆக உயர்ந்தன, இதில் 24,95,591 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், 2,43,50,816 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,11,388  -ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 20.39 லட்சம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 20.06 கோடி கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 76..லட்சம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT