கேரளத்தில் புதிதாக 28,798 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் முதல்வர் பினராயி விஜயனின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் புதிதாக 28,798 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 7,882 ஆக உயர்ந்துள்ளது.
2,48,526 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.