இந்தியா

ராஜீவ் காந்தி நினைவு நாள்: தந்தையின் நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி

21st May 2021 11:40 AM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இன்று ராஜீவ் காந்தியை நினைவுகூர்ந்து பதிவுகளை இட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தில்லியில் உள்ள  ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில், அவரது மகனும், எம்பியுமான ராகுல் காந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பலரும் ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

ADVERTISEMENT

மேலும், ராகுல் காந்தி, தனது தந்தையை நினைவு கூறும்விதாக, 'உண்மை, இரக்கம், முன்னேற்றம்' என பதிவிட்டு தந்தையின் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

Tags : rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT