மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 29,644 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,644 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,27,092ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 555 பேர் பலியானார்கள்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 86,618ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 44,493 பேர் குணமடைந்தனர். இதுவரை 50,70,801 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 3,67,121 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
ADVERTISEMENT
27,94,457 பேர் வீடுகளிலும், 20,946 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.