இந்தியா

சிவபோஜன் திட்டத்தை ஜூன் 14 வரை நீட்டித்தது மகாராஷ்டிர அரசு 

21st May 2021 05:25 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தில் ஏழைகளுக்கு வழங்கப்படும் சிவ போஜன் இலவச உணவு வழங்கும் திட்டத்தை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

மே 14-இல் முதல்வர் அலுவலகத்தின் (சி.எம்.ஓ) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிட்டுள்ளதாக மாநில உணவு மற்றும் சிவில் விநியோகத் துறை தெரிவித்துள்ளது. 

கடந்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் 950 மையங்களில் ரூ.10-க்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டது. இந்தாண்டு ஏப்ரல் 15 முதல் மே 20 வரை 48 லட்சம் உள்பட இதுவரை 4.27 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT