இந்தியா

கோவாவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

21st May 2021 01:46 PM

ADVERTISEMENT

 

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 

தொடர்ந்து மே 31 வரை ஊடரங்கு நீட்டிக்க உள்ளோம், மாநிலத்தில் உள்ள விதிமுறைகள் அவ்வாறே தொடரும். 

ADVERTISEMENT

முன்னதாக ஊரடங்கு உத்தரவை மே 9 முதல் மே 23 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1  மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் மருத்துவக் கடைகள் மற்றும் உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT