இந்தியா

‘மக்கள் விரோத நடவடிக்கைகளில் மத்திய அரசு’: சோனியா காந்தி குற்றச்சாட்டு

21st May 2021 04:52 PM

ADVERTISEMENT

பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்தி மத்திய அரசை விமர்சித்தார். 

சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்தை பாராட்டிய அவர், பொது மக்களின், குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கையில் மாநில அரசு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் கூறினார்.

 

ADVERTISEMENT

விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் சத்தீஸ்கர் மாநில அரசின் திட்டத்தைப் பாராட்டி பேசிய சோனியா காந்தி, “தற்போதைய சூழலில் புதிய வேளாண் சட்டங்களின் மூலம் மத்திய அரசு விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாடி வருகிறது” எனத் தெரிவித்தார். 

"ராஜீவ் காந்தி எப்போதும் தனது எண்ணங்களிலும் முடிவுகளிலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டிருந்ததாகத் தெரிவித்த சோனியா காந்தி விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் பொருளாதார ரீதியாக வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் பார்க்க அவர் விரும்பியதாகக் குறிப்பிட்டார்.

பாஜக தலைமையிலான மத்திய பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சோனியா காந்தி விமர்சனம் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT