இந்தியா

கர்நாடகத்தில் 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு: ஒரேநாளில் 28,869 பேருக்கு கரோனா

20th May 2021 09:23 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் ஒரேநாளில் 28,869 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,869 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,35,524 ஆக உயா்ந்துள்ளது. 
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 52,257 போ் இன்று வீடு திரும்பினா். இதுவரை 17,76,695 போ் குணமாகி வீடு திரும்பினா். 5,34,954 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 548 போ் இன்று இறந்தனா். இதுவரை 23,854 போ் உயிரிழந்துள்ளனா். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT