இந்தியா

'கருப்புப் பூஞ்சை': கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

20th May 2021 04:55 PM

ADVERTISEMENT

கருப்புப்  பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இஎன்டி மருத்துவர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்களைப் பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

படிக்க: கருப்புப் பூஞ்சையைக் கண்டறிவது எப்படி?

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், ஆம்போடெரிசின் பி (Amphotericin B) என்ற மருந்தை கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கருப்புப் பூஞ்சை நோயை தொற்று நோய் பட்டியலில் சேர்க்கலாம் என்றும், பூஞ்சை நோயை கொள்ளை நோயாக அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மியூகோமைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை. இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே இந்த கருப்புப் பூஞ்சை தாக்கி வருகிறது. 

ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்றுநோயாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT