இந்தியா

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு எப்போது தடுப்பூசி?

19th May 2021 04:52 PM

ADVERTISEMENT

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகே கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

வேறு பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருவோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும்.

ADVERTISEMENT

அத்தகைய இக்கட்டான சூழலில் 4 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும். 

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT