இந்தியா

ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்: தில்லி மருத்துவர்

19th May 2021 11:43 AM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும் என்று தில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா தெரிவித்துள்ளார். 

தில்லியில் இது தொடர்பாக அவர் பேசியதாவது, ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகளிடம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரெம்டெசிவிர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாததால், அதனைக் கைவிட முடிவு செய்துள்ளோம். தற்போது மூன்று மருந்துகள் மட்டுமே கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் படி ஏற்கெனவே  பிளாஸ்மா சிகிச்சை முறையும் கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT