இந்தியா

தேசியவாத காங்கிரஸின் கேரள மாநில தலைவராக பி.சி.சாக்கோ நியமனம்

19th May 2021 05:03 PM

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள தலைவராக பணியாற்றி வந்த தாமஸ் சாண்டி மறைந்ததைத் தொடர்ந்து தற்காலிகத் தலைவராக டி.பி.பீட்டம்பரன் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில் கேரள மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பி.சி.சாக்கோ நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின் பி.சி.சாக்கோ தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT