இந்தியா

கேரளத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் பெண் பத்திரிகையாளர்

19th May 2021 06:03 PM

ADVERTISEMENT

கேரளத்தில் ஆட்சியமைக்க உள்ள இடது முன்னணி அரசின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் பதவியேற்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் பதவியேற்க உள்ள நிலையில் அவரது அமைச்சரவையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு இடமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. 

பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவுள்ள 21 அமைச்சர்களும் புதியவர்கள் என்றும் அக்கட்சி இன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் அரண்முளா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீணா ஜார்ஜ் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மலையாளத்தின் முன்னணி செய்தி ஊடகத்தில் பத்திரிகையாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கரோனா பேரிடர் சூழலில் முன்னாள் அமைச்சர் ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது சர்ச்சையான நிலையில் வீணா ஜார்ஜ் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டது கூடுதல் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT