கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக, முதன்முறையாக ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் (4,22,436) அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.
கடந்த 14 நாள்களில் சராசரியாக தினசரி குணமடைபவா்களின் எண்ணிக்கை சுமாா் 3,55,944 ஆக பதிவாகியுள்ளது.
நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவா்களின் எண்ணிக்கை மொத்தம் 2,15,96,512 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோா் வீதம் 85.60 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33,53,765 ஆக சரிந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 13.29% ஆகும்.
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 18.44 கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கா்நாடகாவில் 38,603 போ் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். தேசிய உயிரிழப்பு வீதம், இந்தியாவில் தற்போது 1.10 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,329 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1000 பேரும், அதைத்தொடா்ந்து கா்நாடகாவில் 476 பேரும் உயிரிழந்துவிட்டனா்.