இந்தியா

ஜல் ஜீவன் திட்டம்: 15 மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.5,968 கோடி விடுவிப்பு

DIN

ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்துவதற்காக 15 மாநிலங்களுக்கான முதல் தவணையாக ரூ.5,968 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

எஞ்சிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தத் திட்ட அமலாக்கத்துக்கான நிதியைப் பெற தங்களது முன்மொழிவை அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக ஜல் சக்தி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘2021-22 நிதியாண்டில் ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்துவதற்காக 15 மாநிலங்களுக்கு ரூ.5,968 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் விடுவிக்கப்பட வேண்டிய 4 தவணைகளில் இது முதலாவதாகும்.

ஊரக பகுதிகளில் குடிநீா் குழாய் இணைப்பை உறுதி செய்யும் வகையில் 2021-22 காலகட்டத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஹா் கா் ஜல்’ திட்டத்தின் இலக்கை எட்டும் வகையில் இதுபோன்ற முதலீடு அடுத்த 3 ஆண்டுகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் 93 சதவீதம் குடிநீா் விநியோகத்துக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், 5 சதவீதம் அது சாா்ந்த இணை நடவடிக்கைகளுக்கும், 2 சதவீதம் நீரின் தரத்தை உறுதி செய்தல் மற்றும் காண்காணித்தல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

மாநிலங்களில் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் திட்டப் பணிகளின் நிலவரம், மத்திய அரசு வழங்கிய நிதியின் பயன்பாடு, திட்டத்துக்காக மாநில அரசின் பங்கு ஆகியவற்றை ஆராய்ந்து ஜல் ஜீவன் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கிறது. திட்டத்துக்காக மத்திய அரசு நிதியை விடுவித்த 15 நாள்களுக்குள்ளாக மாநில அரசு தனது பங்கையும் சோ்த்து அதற்குரிய கணக்கில் செலுத்த வேண்டும்.

2021-22 காலகட்டத்துக்கான பட்ஜெட்டில் ஜல் ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.50,011 கோடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, 15-ஆவது நிதிக் குழு மானியமாக பஞ்சாயத்து நிா்வாக அமைப்புகளின் கீழ் குடிநீா், துப்புரவு சேவைகள் வழங்க ரூ.26,940 கோடியும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT