இந்தியா

மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியனின் சகோதரர் ஜிதேந்தர் பாலியன் கரோனாவுக்கு பலி

18th May 2021 12:42 PM

ADVERTISEMENT

 

மத்திய அமைச்சர் சஞ்சீவ் பாலியனின் சகோதரர் ஜிதேந்தர் பாலியன் கரோனா தொற்று காரணமாக தில்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் முடிவடைந்த பஞ்சாயத்துத் தேர்தலில் முசாபர்நகர் மாவட்டத்தில் குத்பா கிராமத்தின் கிராமத் தலைவராக மத்திய அமைச்சரின் உறவினர் சகோதரரான ஜிதேந்தர் பால்யன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது அவர் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT