இந்தியா

கைதிகளுக்கு 90 நாள்கள் இடைக்கால ஜாமீன்: ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம்

18th May 2021 04:19 PM

ADVERTISEMENT

 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு யூனியன் பிரதேசத்தில் உள்ள சிறைக் கைதிகளுக்கு 90 நாள்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க  ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 

நீதிபதி அலி முகமது மாக்ரி தலைமையிலான உயர்மட்ட அதிகாரக் குழு, மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஜம்மு-காஷ்மீரின் சட்ட சேவை ஆணையத்தின்படி குற்றவாளிகளின் வகை மற்றும் விசாரணைகளின் கீழ் தெரிந்துகொள்ளக் குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க விடுவிக்கப்படலாம்.

ADVERTISEMENT

சிறைச்சாலைகளின் காவல்துறை இயக்குநர்(டிஜிபி) சுகாதாரத் துறையுடன் ஒருங்கிணைந்து கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை  உறுதி செய்யுமாறு நீதிபதி மேக்ரி உத்தரவிட்டார்.

இது தவிர, சமையலறை, குளியலறைகள் போன்ற பகுதிகளை சுகாதாரமாக வைத்திருக்கவும், கைதிகள் மற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெயியை கடைப்பிடிக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறை அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT