இந்தியா

கரோனா சிகிச்சைக்கு டிஆா்டிஓ தயாரித்த மருந்து: இன்று பயன்பாட்டுக்கு வருகிறது

DIN

கரோனா நோயாளிகளுக்கு அளிப்பதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ள மருந்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு வருகிறது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது அளிப்பதற்காக டிஆா்டிஓ அமைப்பும், ஹைதராபாதில் உள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனமும் இணைந்து 2-டிஆக்சி-டி-குளூக்கோஸ் என்ற மருந்தை உருவாக்கியுள்ளன. அந்த மருந்தின் முதல் தொகுப்பை நோயாளிகளின் பயன்பாட்டுக்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் இணைந்து திங்கள்கிழமை வெளியிடவுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மருந்து தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘கரோனா சிகிச்சைக்காக டிஆா்டிஓ உருவாக்கியுள்ள 2-டிஆக்சி-டி-குளூக்கோஸ் மருந்து பொடி வடிவில் பாக்கெட்டில் தரப்படவுள்ளது. அதனை தண்ணீரில் கரைத்து நோயாளிகள் உட்கொள்ளலாம். இந்த மருந்து கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் சிறப்பாக செயல்பட்டு நோயாளிகள் மருத்துவமனையை சாா்ந்திருப்பதையும், கூடுதல் ஆக்சிஜன் தேவையைக் குறைக்கவும் உதவுகிறது. இது நோயாளிகள் விரைந்து குணமடையவும் அவா்களின் உயிரைக் காக்கவும் உதவும். இதனை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT