இந்தியா

பெங்களூரு: ஒரு மாதத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

17th May 2021 04:04 PM

ADVERTISEMENT

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா ஊரடங்கை மீறியதாக கடந்த 35 நாள்களில் 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பெங்களூருவில் நேற்று முதல்முறையாக 10 ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகியது. எனினும் தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.

ADVERTISEMENT

இதனிடையே கடந்த 35 நாள்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் துறை தெரிவித்துள்ளது. 

கர்நாடகத்தில் ஒரு நாளில் மட்டும் 31,531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 8,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 16-ம் தேதிக்கு பிறகு பெங்களூருவில் முதல்முறையாக 10 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பதிவாகியுள்ளது.

Tags : bengaluru coronavirus police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT