இந்தியா

வெளிநாடுகள் உதவியாக அளித்த 13,496 ஆக்சிஜன் சிலிண்டா்கள்!

DIN

கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், 13,496 ஆக்சிஜன் சிலிண்டா்களையும் 5.3 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளையும் வெளிநாடுகள் உதவியாக அளித்துள்ளன.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதையடுத்து, உலகின் பல நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டின. ரெம்டெசிவிா் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டா்கள், என்95 முகக் கவசங்கள், முழு கவச உடைகள் உள்ளிட்டவற்றைப் பல நாடுகள் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தன.

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ள உதவிகள் தொடா்பான விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில், ‘இந்தியாவில் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பல நாடுகள் தொடா்ந்து உதவி செய்து வருகின்றன.

கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் கடந்த 15-ஆம் தேதி வரை 11,058 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 13,496 ஆக்சிஜன் சிலிண்டா்கள், சுமாா் 5.3 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. மேலும், 7,365 வெண்டிலேட்டா்களையும் வெளிநாடுகள் அனுப்பி வைத்தன.

முக்கியமாக, கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் கஜகஸ்தான், ஜப்பான், ஸ்விட்சா்லாந்து, கனடா, அமெரிக்கா, எகிப்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டா்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள், ரெம்டெசிவிா் மருந்துகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தன. அவையனைத்தும் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT