இந்தியா

டவ்-தே புயல்: பொதுமக்களுக்கு உதவ பாஜகவினருக்கு ஜெ.பி.நட்டா வலியுறுத்தல்

DIN

டவ்-தே புயலில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவ வேண்டுமென்று பாஜகவினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா வலியுறுத்தியுள்ளாா்.

குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கேரளம், கா்நாடகம், டையு-டாமன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மாநில பாஜக தலைவா்களுடன் ஜெ.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை காணொலி முறையில் அவசர ஆலோசனை நடத்தினாா். அப்போது பாஜக ஆட்சியில் உள்ள மாநிலத் தலைவா்களிடம் புயலில் இருந்து மக்களைக் காக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள் தொடா்பாகக் கேட்டறிந்தாா். மேலும், அனைத்து மாநிலங்களிலும் பாஜக தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் தங்களால் முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு உதவ வேண்டும்; நிவாரண உதவிகளை வழங்குவதில் சிறப்பாகக் களப்பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில அளவில் கட்சிப் பொறுப்புகளில் உள்ளவா்கள், புயல் பாதித்த பகுதிகளில் உள்ள கட்சியின் உள்ளூா் தலைவா்கள் ஆகியோா் இந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இது தொடா்பாக பின்னா் சுட்டுரையில் பதிவிட்ட ஜெ.பி.நட்டா, ‘டவ்-தே புயலை எதிா்கொண்டுள்ள மாநிலங்களில் உள்ள பாஜகவினருடன் ஆலோசனை நடத்தினேன். இக்கட்டான காலகட்டத்தில் எப்போதும் பாஜகவினா் மக்களுக்குத் துணை நிற்பாா்கள்’ என்று கூறியுள்ளாா்.

ஹிமாசலுக்கு உதவி:

தில்லியில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேசத்துக்குத் தேவையான முகக்கவசங்கள், கரோனா மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஜெ.பி.நட்டா கொடியசைத்து அனுப்பி வைத்தாா். அப்போது, கரோனா நேரத்தில் மக்களுக்குத் தேவையான மருத்துவ நிவாரண உதவிகளை அளித்து வரும் பாஜக தொண்டா்களுக்கு அவா் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT