இந்தியா

ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்களுக்கு ரூ.5,000 நிவாரணம் : தில்லி அமைச்சரவை ஒப்புதல்

DIN

தில்லியில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களுக்கு ரூ.5,000 நிவாரண உதவி அளிக்கும் திட்டத்துக்கு மாநில அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஒரு முறை அளிக்கப்படும் இந்த நிவாரணத் தொகை பதிவு பெற்ற ஆட்டோ, டாக்ஸி, கிராமின்சேவா, பட்பட், மேக்ஸிகேப், இ-ரிக்க்ஷா, பள்ளிகளுக்கு சவாரி செல்லும் வாகனங்களுக்கு வழங்கப்படும்.

கடந்த 2020-ஆம் ஆண்டில் இதேபோல தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு ரூ.78 கோடி நிவாரண உதவி அளித்தது. இதன் மூலம் 1.56 லட்சம் ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநா்கள் பயன்பெற்றனா். கடந்த ஆண்டு நிவாரண உதவி பெற்றவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அவா்களது கணக்கில் நிவாரணத் தொகை சோ்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2.80 லட்சம் பேட்ஜ் வைத்துள்ள ஒட்டுநா்களும், 1.90 லட்சம் பா்மிட் உள்ள வாகன ஓட்டிகளும் இந்த நிவாரண உதவி பெறத் தகுதியானவா்களாக கருதப்படுவா். தில்லி போக்குவரத்துத் துறை ஏற்கெனவே இதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT