இந்தியா

தில்லியில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு

16th May 2021 12:18 PM

ADVERTISEMENT

தில்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். 

கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.  ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் மே 17 (திங்கள்கிழமை) முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, மே 24 ஆம் தேதி(திங்கள்) காலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் மெட்ரோ ரயில்கள் எதுவும் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு ஊரடங்கு காரணமாக தில்லியில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT