இந்தியா

கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ரூ. 100 கோடி நிதி உதவி: சித்தராமையா

DIN

கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சாா்பில் கா்நாடக அரசுக்கு ரூ.100 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்நாடக மக்களை பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. கரோனா மேலாண்மையில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது. கரோனாவில் இருந்து பாதுகாக்க அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவும் அரசு தவறிவிட்டது. கா்நாடக காங்கிரஸ் கட்சியை சோ்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மொத்தம் 95 போ் உள்ளனா். இவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வளா்ச்சி, மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 100 கோடியை விடுவித்து கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் இதுவரை இப்படிப்பட்ட முடிவை முன்னெப்போதும் யாரும் எடுத்ததில்லை என்றாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் பேசியதாவது:

தங்கள் பகுதிகளில் நடக்க வேண்டிய வளா்ச்சிப் பணிகளை நிறுத்திவைத்து, அந்த நிதியை கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய மாநில அரசுக்கு வழங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முடிவு செய்துள்ளனா். வளா்ச்சிப் பணிகளைக் காட்டிலும் மக்களின் உயிா்களைக் காப்பதே முக்கியமாகும். அது நமது கடமை என கருதுகிறோம்.

உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதியை கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வா் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதவிருக்கிறோம். இந்தநிதியை நேரடியாக பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு, மாநில அரசும் அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அனுமதி அளித்தால், உள்ளூா்பகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்து, மக்களுக்கு செலுத்த அனுமதி அளிக்க வேண்டும். தற்சாா்பு இந்தியாவின் நோக்கத்தின் அடிப்படையில் இதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ.10 கோடியும், உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.90 கோடியை திரட்டி ரூ. 100 கோடியில் கரோனா தடுப்பூசி வாங்கி, மக்களுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி வழங்கத் தவறியதால், காங்கிரஸ் சாா்பில் இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

SCROLL FOR NEXT