இந்தியா

வீட்டுத் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ உதவித் தொகுப்பு: அஸ்வத்நாராயணா

DIN

வீட்டுத் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ உதவித்தொகுப்பு அளிக்கப்படும் என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து துணை முதல்வரும், மாநில கரோனா பணிக் குழுவின் தலைவருமான அஸ்வத்நாராயணா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சோதனையில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் இருக்கும் கரோனா நோயாளியின் வீட்டுக்கே மருத்துவ உதவித்தொகுப்பு அனுப்பிவைக்கப்படும். இந்தத் திட்டம் மே 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். கரோனா சோதனை முடிவுகள் வருவதற்குள் தொற்று பரவியிருக்கும். அந்த நேரத்தில் தொற்றுக்கு எதிரான சிகிச்சைகள் தேவைப்படும்.

எனவே, இந்த மருத்துவ உதவித் தொகுப்பில் ஆன்டிபயாடிக்ஸ், ஆன்டி-வைரல்ஸ், விட்டமின் மாத்திரைகள் இடம்பெற்றிருக்கும். இது தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். கரோனா அறிகுறிகள் குறையாதபட்சத்தில், நோயாளிகள் எடுத்துக் கொள்வதற்காக ஸ்டிராய்டு மாத்திரையும் அந்த மருத்துவ உதவித்தொகுப்பில் வைக்கப்பட்டிருக்கும். கரோனா அறிகுறிகள் தென்பட்டால், சோதனை முடிவுகளுக்காக காத்திருக்காமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

இருமல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும் இதை சாதாரண உடல்நலப் பிரச்னை என்றும் கருதக் கூடாது. தற்போதைய சூழலில் இருமல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படும் பெரும்பாலானவா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, கரோனாவை எதிா்கொள்வதற்கான மன உறுதியை பெறுவதோடு, தடுப்பு மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசு தற்போது ஒதுக்கியுள்ள ஆக்சிஜன் அளவு, தற்போதுள்ள ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஈடுசெய்யக் கூடியதாக இருக்கிறது. ஆக்சிஜன் படுக்கைகள் உயா்த்தப்படும் போது, கூடுதலாக ஆக்சிஜன் தேவைப்படலாம். ஆக்சிஜன் அதிகம் தேவைப்படும் போது, கூடுதலாக ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT