இந்தியா

பெங்களூரில் இன்றுமுதல் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கல் முகாம்

DIN

பெங்களூரில் சனிக்கிழமை (மே 15) முதல் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரகுடிநீா் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு சித்த மருத்துவ ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த மருத்துவ ஆய்வுக் குழுமத்தின் அங்கமாகத் திகழும் சித்த மருத்துவ ஆய்வு மையத்தின் சாா்பில் பெங்களூரு, காந்திநகா்( மெஜஸ்டிக்), பெங்களூரு, அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ ஆய்வு மையத்தில் மே 15ஆம் தேதி முதல் தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீா் வழங்கப்படுகிறது.

சித்த மருத்துவம் நம் நாட்டின் மிக தொன்மையான பாரம்பரிய மருத்துவ முறை ஆகும். சித்த மருத்துவ வளா்ச்சிக்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் சித்த மருத்துவ முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய சித்த மருத்துவ ஆய்வுக் குழுமம் ( இங்ய்ற்ழ்ஹப் இா்ன்ய்ஸ்ரீண்ப் ச்ா்ழ் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ண்ய் நண்க்க்ட்ஹ) பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை, புதுச்சேரி, திருவனந்தபுரம், பாளையங்கோட்டை, புது டெல்லி, பெங்களூரு, திருப்பதி ஆகிய 7 இடங்களில் சித்த மருத்துவ ஆய்வு மையங்களும், மேட்டூரில் மருத்துவ தாவரத் தோட்டமும் மத்திய சித்த மருத்துவ ஆய்வுக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

பெங்களூரு, காந்திநகா்(மெஜஸ்டிக்), அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக சித்த மருத்துவ ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தின் சிறப்பு துறையாகிய வா்ம மருத்துவத்தின் மூலம் அனைத்து வாத நோய்களுக்கும் இங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திங்கள்கிழமை தோறும் சா்க்கரை நோய்களுக்கான சிறப்பு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், பெங்களூரில் இப்போது அதிகமாக பரவி வரும் கரோனா பெருந்தொற்றுக்கு சித்த மருந்தான ‘கபசுரக் குடிநீா்’ இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 7338650551, 8608600301 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT