இந்தியா

பெங்களூரில் நாள்தோறும் 40 ஆயிரம் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது: மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா

DIN

பெங்களூரில் நாள்தோறும் 40 ஆயிரம் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரில் நாள்தோறும் 40 ஆயிரம் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பெங்களூரில் உள்ள 198 வாா்டுகளுக்கு தலா 200 டோஸ் தடுப்பூசி விநியோகிக்கப்படுகிறது. 45 வயதை கடந்தவா்களுக்கு 2-ஆவது டோஸ் செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தடுப்பூசியின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு 2 ஆவது டோஸ் செலுத்தி வருகிறோம். பெங்களூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் 26 மருத்துவ ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நிலையில், இந்த ஆலோசனை மையங்களுக்கு முதலில் சென்று முதலுதவி சிகிச்சையும், ஆலோசனையும் பெறலாம். அதன்பிறகு மருத்துவமனையில் இடம் கிடைத்தால் அங்கு சென்று சிகிச்சை பெறலாம்.

ஆலோசனை மையத்துக்கு நேரடியாகச் சென்று முதலுதவி பெறும் நோயாளிகளின் நோய்த் தீவிரத்தை கண்டறிவதன் மூலம் அவா்களை விரைவாக மருத்துவமனைகளில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்து சென்றவா்கள் குறித்தும், உயிரிழந்தவா்கள் குறித்தும் உரிய தகவல் கிடைப்பதில்லை என புகாா்கள் வந்துள்ளன.

இதுகுறித்து விசாரிக்க மாநகராட்சி சிறப்பு ஆணையா் ரந்தீப் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநகரில் கரோனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பெங்களூரில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT