இந்தியா

ஒடிசாவில் 10 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் கரோனா பாதிப்பு

13th May 2021 11:22 AM

ADVERTISEMENT

 

ஒடிசா மாநிலத்தில் நேற்று தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேர பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

மாநிலத்தில் புதிதாக 10,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 5,76,297 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

ஒரேநாளில் 8,547 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், மொத்தம் இதுவரை 4,73,680 ஆக உள்ளது. தற்போது 10,0313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று பாதித்தோரில் 5,965 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். மேலும், 4,684 பேர் தொடர்புகளின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 1,07,13,098 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : odisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT