இந்தியா

இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை: ஐசிஎம்ஆர்

13th May 2021 11:40 AM

ADVERTISEMENT


புதுதில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது ஆலை அதிவேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்)  தலைவர் பல்ராம் பார்கவா கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது ஆலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிர் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய அரசு பொருளாதார தாக்கத்தின் காரணமாக நாடு தழுவிய பொதுமுடக்கத்தில் இருந்து விலகி, அதை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்கு விட்டுள்ளது. 

பல மாநில அரசுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல கட்டங்களான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. அவை பெரும்பாலும் வாராந்திர அல்லது பதினைந்து நாள்கள், வாரங்கள் என அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தியாவில் அதிவேகமாக பரவி வரு கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது ஆலையின் பரவலை கட்டுப்படுத்த நாட்டின் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பெரும்பாலான பகுதிகளில் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை உள்ளது. 

கரோனா தொற்று பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள அனைத்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அவசியம் அமல்படுத்த வேண்டும்.

தற்போது நாட்டில் 718-க்கும்  அதிகமான மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், புதுதில்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூருவின் தொழில்நுட்பமையம் ஆகியவவை அடங்கும்.    

தற்போதைய நிலையில் 533 மாவட்டங்களில் தான் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொற்று பாதிப்பு உள்ளதாகவும் அந்த மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 5 சதவீதத்திற்கும் கீழ் வரும் வரை முழு முடக்கம் நீட்டிக்க வேண்டும். இது ஆறு, எட்டு வாரங்களுக்கு கீழான பொது முடக்கங்களில் நடக்காது. 

நாட்டின் தலைநகரில் தொற்று பாதிப்பு  சுமார் 35 சதவீதத்தை எட்டிய நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 17 சதவீதமாக குறைந்துள்ளது. அங்கு நாளையே பொதுமுடக்கத்துக்கு தளர்வளிக்கப்பட்டால், அது ஒரு பேரழிவாக தான் இருக்கும் என்று  பல்ராம் பார்கவா கூறினார். 

மேலும் நோய்த்தொற்றால் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தினமும் சுமார் 3,50,000 பாதிப்புகளும், 4 ஆயிரம் இறப்புகளும் பதிவாகின்றன. மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன, மருத்துவமனைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை, உயிர்காக்கும் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள், தடுப்பு மருந்தகள் பற்றாக்குறைகள் நிலவி வருகின்றன.  தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு 10 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர். 

ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்ற கரோனா தொடர்பான தேசிய கூட்டத்தில் 10 சதவீதத்திற்கும், அதற்கு அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தை அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

ஆனால், தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது, அதுவும் 14 நாள்களுக்கு மட்டுமே செயல்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக (ஐசிஎம்ஆர்) தலைவர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார். 

Tags : ICMR chief remain locked down Dr. Balram Bhargava
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT