இந்தியா

கேரளத்தில் இன்று 10 மணி வரை இறைச்சிக் கடைகள் செயல்பட அனுமதி 

ANI

ரம்ஜான் பண்டிகையைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை இரவு 10 மணி வரை இறைச்சிக் கடைகள் இயங்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. 

அமாவாசையின் பிறை தெரிவதைப் பொறுத்து மே 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரம்ஜான் பண்டிகைக்காக இன்று இரவு 10 மணி வரை இறைச்சி கடைகள் செயல்பட அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா இரண்டாம் அலையைச் சமாளிக்க மே 16 வரை மாநிலம் தழுவிய பொதுமுடக்கத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். 

மேலும், ரம்ஜான் கொண்டாட்டத்திற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ பிற மாநிலங்களிலிருந்து கேரளத்துக்குள் நுழையும் மக்கள் அனைவரும் ஆர்டி-பி.சி.ஆர் எதிர்மறை சான்று கொண்டுவர வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதுவும் கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சான்றாக இருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37,290 பேருக்குத் தொற்றும், 79 இறப்புகளும் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT