இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் மாதாங் சின் கரோனாவுக்கு பலி

IANS

முன்னாள் மத்திய அமைச்சரும், அசாமின் காங்கிரஸ் தலைவருமான மாதாங் சின் கரோனா தொற்றுக்கு புதுதில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். 

கிழக்கு அசாமில் உள்ள டின்சுகியாவில் இருந்து வந்த 59 வயதான காங்கிரஸ் தலைவர் மாதாங் 1992ல் அசாம் மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். நெருங்கிய உறவினர் ஆவார். 

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கரோனா பாதிக்கப்பட்டு தேசிய தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

சின் 1994 முதல் 1998 வரை மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சராக பணியாற்றினார். வடகிழக்கு பகுதி தொடர்பான பெரும்பாலான முடிவுகளில் முக்கிய பங்கு வகித்தவர். 

கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து, நிலக்கரி தொடர்பான புகாரில் சிக்சி 1998ல் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சாரதா சிட் நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக பல தொலைக்காட்சி சேனல்களைத் தொடங்கிய சின்ஹா 2015ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது.

சின் மரணத்திற்கு அசாம் முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT