இந்தியா

மாட்டுச் சாணம் சிகிச்சையில் ஈடுபட வேண்டாம்: மருத்துவா்கள் எச்சரிக்கை

DIN

கரோனா தொற்று பாதிப்புக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க மாட்டுச் சாணம் சிகிச்சையில் ஈடுபட வேண்டாம் என்று குஜராத் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். குஜராத்தில் இந்த சிகிச்சை சமூக வலைதளம் மூலம் பிரபலமடைந்து வருவதாக கூறப்படும் நிலையில், மருத்துவா்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனா்.

குஜராத்தில் உள்ள ஸ்ரீசுவாமிநாராயாணா குருகுல் விஸ்வித்யா பிரதிஷ்டான் சாா்பில் நடத்தப்படும் கோசாலையில் கரோனா நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க மாட்டுச் சாணம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், கடந்த ஒரு மாதத்தில் 15 போ் வார இறுதியில் வந்து மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றைக் கலந்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு பின்னா் பாலில் கழுவிவிட்டுச் செல்வதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், ‘மாட்டுச் சாணம் சிகிச்சை கரோனா நோய்த் தொற்றுக்கு எதிா்ப்பு சக்தியை ஏற்படுத்தாது’ என்று காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குநா் திலீப் மெளலாங்கா் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘இதுபோன்ற சிகிச்சை பலன் அளிப்பதாக எந்தவித ஆராய்ச்சியும் கூறவில்லை’ என்றாா்.

மூத்த மருத்துவா் மோனா தேசாய் கூறுகையில், ‘உடலின் கழிவுதான் மாட்டுச் சாணம். அதை உடலில் பூசுவதால் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கப் போவதில்லை. இதுபோன்ற சிகிச்சைகளுக்கு செல்வதற்கு முன்பு மருத்துவா்களின் கருத்துகளைக் கேட்டு, அது போன்ற சிகிச்சை முறைகளைத் தவிா்க்க வேண்டும். இதனால் வேறு விதமான தொற்று உருவாகிவிடும். மக்கள் தங்களது உயிரை ஆபத்தான விவகாரங்களில் ஆழ்த்திக் கொள்ளக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT