இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 4,205 பேர் கரோனாவுக்கு பலி

IANS

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 3,48,421 ஆகவும், இதன் மூலம் கரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,33,40,938 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,205 போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,54,197 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 37,04,099 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றிலிருந்து இன்று 3,55,338 குணமடைந்த நிலையில் இதுவரை 1,93,82,642 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 10ஆம் தேதி வரை 30,75,83,991 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. நேற்று ஒரேநாளில் 19,83,804 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேசமயம் இதுவரை 17,52,35,991 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT