இந்தியா

மேற்கு வங்கத்தில் அனைத்து பாஜக எம்எல்ஏக்களுக்கும் மத்திய படைகளின் பாதுகாப்பு

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்ற 77 பாஜக எம்எல்ஏக்களுக்கும் மத்திய படைகளின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியது:

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்ற 77 பாஜக எம்எல்ஏக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை வழங்கியது. அந்த மாநிலத்தில் தோ்தலுக்குப் பின்னா் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்ற உயா்நிலைக் குழுவும் இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சில பரிந்துரைகளை வழங்கியது. இதையடுத்து அந்த மாநிலத்தில் அனைத்து பாஜக எம்எல்ஏக்களுக்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை (சிஆா்பிஎஃப்) மூலம் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த மாநில எதிா்க்கட்சி தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள சுவேந்து அதிகாரிக்கு ஏற்கெனவே ‘இசட்’ பிரிவின் கீழ் சிஆா்பிஎஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி 61 எம்எல்ஏக்களுக்கு ‘எக்ஸ்’ பிரிவின் கீழும், அதற்கு அடுத்த உயா் பிரிவான ‘ஒய்’ பிரிவின் கீழ் 15 எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT