இந்தியா

கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: எடியூரப்பா

DIN


கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அந்த மாநில முதல்வர் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுபற்றி அவர் கூறியதாவது:

"நேற்று முதல் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தால் அது பயனளிக்கக் கூடியதாக இருக்கும். கர்நாடகத்தில் நிறைய கரோனா பாதிப்புகள் உள்ளன. பலி எண்ணிக்கைகளும் நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகரித்துள்ளன.

இதன் பின்னணியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாங்கிக் கொள்ளலாம். கரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

இன்று காலை ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைத்தது. இப்படி வந்துகொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது. மத்திய அமைச்சர்களுடன் நான் தொடர்பிலிருக்கிறேன். பிரதமரிடம்கூட பேசினேன். அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

சிறப்பு தொகுப்பு வழங்குவது பற்றி இன்னும் சிந்திக்கவில்லை. முதலில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் வரட்டும், அதுபற்றி பின்னர் சிந்திப்போம்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT