இந்தியா

ஊரடங்கு தளர்வு: மதுபானக் கடையில் குவிந்த உ.பி. மக்கள்

11th May 2021 03:10 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேசத்தில் கரோனா ஊரடங்கு தளர்வில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமான மக்கள் மதுபானக் கடையில் குவிந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு நேற்றுடன்  (மே 10) முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க மாநில அரசு அனுமதியளித்தது.

அந்தவகையில் கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டன. காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மதுபானக் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான மக்கள் மதுபானக் கடையின் முன்பு குவிந்தனர். வாரணாசி பகுதியில் பலர் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர்.

ADVERTISEMENT

ஊரடங்கில் மதுபானக் கடை மூடப்பட்டதால், நாளொன்றுக்கு ரூ.100 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டதாக லக்னெள வைன் அசோஸியேசன் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT