இந்தியா

பெட்ரோல், டீசல் விலை இன்றும் புதிய உச்சம்

DIN


சென்னை: செவ்வாய்க்கிழமை காலையில் பெட்ரோல், டீசல் விலை முறையே 27 மற்றும் 30 காசுகள் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை திங்கள்கிழமை புதிய உச்சத்தை எட்டியது. இதையடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை தொடா்ந்து மகாராஷ்டிரத்திலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 29 காசுகள் உயர்ந்து ரூ.93.68-க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ.87.25க்கும் விற்பனையாகிறது.

நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 6-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமையும் உயா்த்தப்பட்டுள்ளது. 

இந்த விலை உயா்வைத் தொடா்ந்து தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.91.80-க்கும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.82.36-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்னா் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அந்த வரிசையில் மகாராஷ்டிரமும் இணைந்தது. அங்குள்ள பா்பனி பகுதியில் செவ்வாய்கிழமை ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் சில்லறை விற்பனை விலையில் 60 சதவீதமும், டீசல் சில்லறை விற்பனை விலையில் 54 சதவீதத்துக்கு அதிகமாகவும் மத்திய, மாநில அரசுகளின் வரிகள் அடங்கியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT