இந்தியா

தெற்கு கோவா மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து

DIN

தெற்கு கோவாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் திடீரென ஆக்சிஜன் கொள்கலனிலிருந்து வாயு கசிந்ததைத் தொடர்ந்து அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

தெற்கு கோவாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஆக்சிஜன் கொள்கலனில் இருந்து திடீரென ஆக்சிஜன் வாயு கசியத் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதி வெண்புகை மண்டலமாகக் காணப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆக்சிஜன் வாயு கசிந்து தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். 

முன்னதாக கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் பிராணவாயு சேகரிப்புக் கலனில் கசிவு ஏற்பட்டு 24 போ் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT