இந்தியா

நம்பிக்கையளிக்கும் கரோனா மருந்து: 'டியோக்ஸி டி குளுக்கோஸ்'

DIN


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் கண்டறியப்பட்டுள்ள 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' என்ற புதிய கரோனா தடுப்பு மருந்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்ந்து மூன்று கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு இம்மருந்து வரும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி அறிவித்தார்,.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் இம்மருந்தை வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

ஜி.சதீஷ் ரெட்டி

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''பாதுகாப்புத் துறையால் கண்டறியப்பட்டுள்ள இம்மருந்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' மருந்து பவுடர் வடிவிலானது. அவசர உதவிக்காக முதற்கட்டமாக  மே 11 அல்லது 12-ம் தேதி 10,000 பாக்கெட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.

மூன்று வாரங்களில் 'டியோக்ஸி டி குளுக்கோஸ்' உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும். இம்மருந்து வைரஸின் உயிரணுக்களில் குவிந்து எதிர்வினையாற்றி மேற்கொண்டு உடலில் வைரஸ் உற்பத்தியாவதைத் தடுக்கிறது.

'டியோக்ஸி டி குளுக்கோஸ்' மருந்தின் 3-வது கட்ட பரிசோதனையில் 51 சதவிகிதத்தினர் 3 நாள்களில் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாள்களில் குணமடைந்தனர். 

'டியோக்ஸி டி குளுக்கோஸ்' பொதுவான மூலக்கூறுகளைக் கொண்டது என்பதால் எந்த நாட்டிலும் இதனை உற்பத்தி செய்ய இயலும். உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு முதல் மூன்று வாரங்களில் பெரிய அளவிலான உற்பத்திக்கு அனுமதி பெறப்படும்.

இந்த மருந்தினைப் பயன்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை ஏற்படாது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இம்மருந்து உகந்தது''. 

மேலும், நெஞ்சுப் பகுதியை ஸ்கேன் செய்வதன் மூலம் கரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை இயந்திரம் மூலம் கண்டறியும் மென்பொருளை மேம்படுத்தும் முயற்சியில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாகவும் சதீஷ் ரெட்டி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

SCROLL FOR NEXT