இந்தியா

கங்கையில் மிதந்து வந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையதா? அச்சத்தில் பிகார்

ENS


பாட்னா: பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தின் சௌஸா பகுதியில் பாய்ந்தோடி வரும் கங்கை நதியில் பல்வேறு நிலையில் மிதந்து வந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

சௌஸா பகுதியில் கங்கை நதியில் 30-க்கும் மேற்பட்ட உடல்கள் கரையொதுங்கியிருந்தது குறித்து நகராட்சிக்கும் காவல்துறையினருக்கும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அழுகிய, பாதி எரிந்த நிலையில் என 12க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு, புதைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் எரிக்க முடியாத நிலையில், எரிக்க போதிய இட வசதியோ, விறகுகளோ இல்லாமல், கரோனா நோயாளிகளின் உடல்கள் இவ்வாறு கங்கை நதியில் தூக்கி வீசப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையதா என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் சுமார் 40 முதல் 45 உடல்கள் மிதந்து வந்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள். ஆனால், மாவட்ட அதிகாரிகள் தரப்பில் 30 முதல் 35 உடல்கள் மிதந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உடல்கள் உத்தரப்பிரதேசத்தின் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது புதிய விஷயமல்ல என்றும், கங்கையில் வீசப்பட்டு, இங்கே கரை ஒதுங்கும் பாதி எரிந்த நிலையிலான உடல்களை பறவைகள் கொத்தித் திண்பதும், நாய்கள் கடித்துச் சாப்பிடுவதும் வழக்கமானதுதான் என்றும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடல்களை எரிக்க கட்டைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், பாதி எரிந்த நிலையிலும், பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட உடல்களும் கங்கையில் வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT