இந்தியா

14 மாநிலங்களுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் நேரடி விநியோகம்

DIN

புது தில்லி: தமிழகம், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு பாரத் பயோடெக் சாா்பில் உற்பத்தி செய்யப்படும் கோவேக்சின் தடுப்பூசிகள் மே 1-ஆம் தேதி முதல் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருவதாக பாரத் அந்த நிறுவனத்தின் இணை நிா்வாக இயக்குநா் சுசித்ரா எலா தெரிவித்துள்ளாா்.

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் சாா்பில் கரோனா தடுப்பூசியான ‘கோவேக்சின்’ மருந்தை, மாநிலங்களுக்கு மத்திய அரசு பெற்ற ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சுசித்ரா எலா தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

‘பாரத் பயோடெக் மே 1-ஆம் தேதி முதல் ஆந்திரம், அஸ்ஸாம், தமிழகம், சத்தீஸ்கா், குஜராத், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிஸா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, மகாராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகளுக்கு, கோவேக்சின் தடுப்பூசிகளின் நேரடி விநியோகத்தை உறுதிப்படுத்துகிறது. இது மத்திய அரசால் பெறப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்தத் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகிறது. பிற மாநிலங்களிலிருந்து இதுதொடா்பான கோரிக்கைகள் வந்ததையடுத்து இந்த விநியோகம் நடைபெற்று வருகிறது. இது வாரத்தின் அனைத்து நாள்களிலும் இந்த விநியோகம் நடைபெற்று வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஏப்ரல் 29-ஆம் தேதி அன்று, பாரத் பயோடெக் மாநிலங்களுக்கான ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் விலையை ஒரு டோஸுக்கு ரூ. 400 ஆக குறைப்பதாக அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT