இந்தியா

மும்பையில் யுரேனியம் பறிமுதல் வழக்கு: என்ஐஏ விசாரணை

DIN

மும்பையில் ரூ.21 கோடி மதிப்பிலான யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஞயிற்றுக்கிழமை கூறியதாவது:

மும்பையில் ஜிகாா் ஜெயேஷ் பாண்ட்யா, அபு தாஹிா் அஃப்சல் சௌதரி ஆகிய இருவரையும் மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் கடந்த 5-ஆம் தேதி கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.21 கோடி மதிப்பிலான 7 கிலோ யுரேனியத்தை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக, முதலில் காலாசவ்கி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பு, வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று அந்த செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT