இந்தியா

தமிழகத்துக்கு மேலும் ஆக்சிஜன் அளிப்பது சாத்தியமில்லை: பிரதமருக்கு கேரள முதல்வா் கடிதம்

DIN

கேரள மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜனை தமிழகம் உள்பட பிற மாநிலங்களுக்கு அளிப்பது செயல்முறை சாத்தியமில்லை என்று அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் முதல்வா் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்தது.

அண்டை மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால் கையிருப்பு 86 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது.

தற்போது கேரளத்தில் 4,02,650 போ் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகிறாா்கள். இந்த எண்ணிக்கை மே 15-க்குள் 6 லட்சமாக அதிகரிக்கலாம்.

அப்போது, கேரளத்தின் ஆக்சிஜன் தேவை 450 மெட்ரின் டன்னாக அதிகரிக்கும்.

கடந்த மே 6-ஆம் தேதி ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வது தொடா்பாக நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் மே 10-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

தற்போதைய சூழலில், மேலும் ஆக்சிஜன் கேரளத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு அளிப்பது செயல்முறை சாத்தியமில்லை.

எஃக்கு துறை நிறுவனங்கள் கேரளத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால் குறுகிய நேரத்தில் ஆக்சிஜன் கொண்டு வருவது கடினமானதாகும்.

ஆகையால், கேரளத்தில் மொத்த உற்பத்தியாகும் 219 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கேரளத்துக்கே பயன்படுத்த ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் பினராயி விஜயன், ‘வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆக்சிஜன் காலி டேங்கா்களை மத்திய அரசு மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். கேரளத்தில் உள்ள 72 பஞ்சாயத்துகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.

கண்ணூா், திருவனந்தபுரம், எா்ணாகுளம் ஆகிய நகா்ப்புற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது வருத்தமளிக்கிறது. கரோனா பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றாா்.

கேரளத்தில் 27,487 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT